தமிழ்நாடு செய்திகள்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் பா.ஜ.க. அரசு அரசியல் செய்து வருகிறது - மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-16 12:37 IST   |   Update On 2025-07-16 12:38:00 IST
  • தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.
  • கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.

மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காது இன்றும் அரசியல் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

* தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.

* கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்கள்.

* கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.

* கச்சத்தீவை தாரைவார்ப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிவர்.

* கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News