தமிழ்நாடு செய்திகள்
null
இளையோர் ஆசிய போட்டி: 2 பதக்கங்கள் வென்ற மகாராஜன் ஆறுமுகப்பாண்டியனுக்கு முதல்வர் பாராட்டு
- கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்.
- கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க, கோவில்பட்டிக்கு வந்திருக்கும் வேளையில், இந்த செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சி.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, இளையோர் ஆசிய போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள மகாராஜன் ஆறுமுகப்பாண்டியனுக்கு என் பாராட்டுகள்.
கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க, கோவில்பட்டிக்கு நான் வந்திருக்கும் வேளையில், இந்த இனிய செய்தியைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கிறேன்.
உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் நமது திராவிட மாடல் அரசு துணைநிற்கும்!
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
60 கிலோ எடைப்பிரிவில் ஸ்னட்ச் மூலம் 114 கிலோவும், க்ளீன் அண்டு ஜெர்க் மூலம் 142 கிலோவும் தூக்கி அசத்தினார்.