தமிழ்நாடு செய்திகள்
ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்த அக்கா- தம்பி உடல்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அஞ்சலி
- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
- வேனில் இருந்து 5 பேரில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் அக்கா, தம்பியான சாருமதி மற்றும் செழியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக இருந்து கேட்கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த அக்கா-தம்பி சாருமதி மற்றும் செழியன் உடல்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.