தமிழ்நாடு செய்திகள்
ஏற்காடு கிராமத்தில் வீடு, வீடாக சென்று இல்லம் தேடி மருத்துவம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
- தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது.
- மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்காடு வருகை தந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாரமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து இல்லம் தேடி மருத்துவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபயிற்சியாக சென்று மக்களை சந்தித்து பேசினார்.