தமிழ்நாடு செய்திகள்

அரசு ஊழியரின் சொத்துக்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல- ஐகோர்ட்

Published On 2024-12-23 13:00 IST   |   Update On 2024-12-23 13:00:00 IST
  • அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை.
  • வழக்கை 2 மாதங்களில் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து காளிப்பிரியனின் சொத்து விபரங்களை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை. ஆனால், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை 2 மாதங்களில் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். 

Tags:    

Similar News