தமிழ்நாடு செய்திகள்

கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Published On 2025-05-20 08:26 IST   |   Update On 2025-05-20 08:26:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் என்பதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News