தமிழ்நாடு செய்திகள்

ஆணவ கொலை: கவினின் உடலை பெற்றுக்கொள்கிறோம்... ஆனால்... உறுதியாக தெரிவித்த தந்தை

Published On 2025-07-31 11:45 IST   |   Update On 2025-07-31 11:45:00 IST
  • சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
  • கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே கவின் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கடந்த 27-ந்தேதி கவினை பாளையங்கோட்டையில் வைத்து வெட்டிக்கொலை செய்தார்.

இதுதொடர்பாக சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக்கொள்வதாக கவின் தந்தை சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News