தமிழ்நாடு செய்திகள்
கரூர் துயர சம்பவம்- நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு.
- கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, தலைவர்கள் மீது அவதூறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரிப்பு.
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரதராஜன் முறையீடு செய்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, தலைவர்கள் மீது அவதூறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கடுமையாக ஆட்சேபனை செய்ததால் வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.