ஜி.டி. நாயுடு என்றுதான் மக்களால் அறியப்படுகிறார்: அதனால்தான் பாலத்திற்கு அந்த பெயர்- தங்கம் தென்னரசு
- அவிநாசி பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- நாயுடு என்பதை ஜாதி பெயர்தானே என விமர்சனம் செய்யப்பட்டது.
ஊர், தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரில் ஜாதி பெயர் இடம் பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. அரசாணை வெளியிட்ட அடுத்த நாள், கோவை அவினாசியில் 10 கி.மீ. நீள மேம்பாலம் திறக்கப்பட்டது. அந்த சாலைக்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் வைக்கப்பட்டது.
நேற்று அரசாணை வெளியிட்டு இன்று சாதி பெயருடன் கூடிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட கோவை அவினாசி மேம்பாலத்திற்கு புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு பெயரை வைத்திருப்பதை குறையாக சொல்கிறார்கள். ஜி.டி. நாயுடு யார்? அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அநத் பகுதிலேயே குடியிருந்தவர்.
கோவை மட்டுமல்ல எல்லாப் பகுதி மக்களாலும் போற்றப்பட்டவர் என்பதால் அவரது பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் ஜி.டி. நாயுடு பெயரை சூட்டியுள்ளார். பலதரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.
ஜி.டி. நாயுடு பெயரில் ஜாதி பெயர் என்றால் ஜி.டி. பாலம் என்றா வைக்க முடியும்?. ஜி.டி. நாயுடு என்று வைக்கப்படுவதனால்தான் இன்னார் என்று அறியப்படுகிறார்.
இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் பார்க்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.