தமிழ்நாடு செய்திகள்
null
எங்களது கை, கால்கள் உடைக்கப்பட்டால் போலீசாரே பொறுப்பு: ரவுடி பரபரப்பு வீடியோ
- நானும் எனது சகோதரரும் குடும்பத்தோடு கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் இருக்கிறோம்.
- சென்னை போலீசார் எங்களை வந்து பிடித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வினோத் என்ற குள்ள வினோத், பாலாஜி. ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரையும் கொல்கத்தாவுக்கு சென்று சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ரவுடி வினோத் கொல்கத்தாவில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நானும் எனது சகோதரரும் குடும்பத்தோடு கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் இருக்கிறோம். சென்னை போலீசார் எங்களை வந்து பிடித்துள்ளனர்.
இதுவரை எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களது கை, கால்கள் உடைக்கப்பட்டால் அதற்கு தமிழக போலீசாரே பொறுப்பாகும்.
இவ்வாறு பேசியுள்ள அவர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினரோடு இருக்கும் காட்சிகளையும் பதிவு செய்து உள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.