தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY: சென்னையில் இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Published On 2025-04-09 15:29 IST   |   Update On 2025-04-09 15:31:00 IST
  • தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது.

முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்ந்து ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News