தமிழ்நாடு செய்திகள்

அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை- அரசாணை வெளியீடு

Published On 2025-05-31 08:01 IST   |   Update On 2025-05-31 08:01:00 IST
  • தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
  • மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும்.

சென்னை:

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும் என சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும்.

சிறப்பு, தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் 28.4.2025 அன்று முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். 28.4.2025-க்கு முன்பு முடிவுற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News