தமிழ்நாடு செய்திகள்

மின்சார கட்டணம் உயர்வு ? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Published On 2025-06-29 14:01 IST   |   Update On 2025-06-29 14:01:00 IST
  • மின் கட்டண உயர்வு தொடர்பான எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை.
  • 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும்.

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " சமூக வலைத்தளங்களில் மின் கட்டணம் தொடர்பாக வதந்தி பரவி வருகிறது.

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை.

மின் கட்டண உயர்வு தொடர்பான எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை.

100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும்" என்றார்.

Tags:    

Similar News