தமிழ்நாடு செய்திகள்

நெருங்கும் தீபாவளி பண்டிகை - விமான கட்டணங்கள் உயர்வு

Published On 2025-10-17 08:38 IST   |   Update On 2025-10-17 08:38:00 IST
  • தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது
  • சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பலரும் சொந்த ஊருக்கு கிளம்ப தொடங்கி உள்ள நிலையில் வழக்கத்தை விட விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. 

* சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,129-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,683 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.4,351-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,158 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,053 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து டெல்லிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,933-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.30,414 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து மும்பைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,356-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,960 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சாதாரண நாட்களில் ரூ.5,293-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.22,169 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சாதாரண நாட்களில் ரூ.2,926-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து கவுகாத்திக்கு சாதாரண நாள் ரூ.6,499-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,639 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News