தமிழ்நாடு செய்திகள்

சென்னையை சூழ்ந்த கருமேகம்.. வெயில் தணிந்து இதமான சூழல்- மக்கள் உற்சாகம்

Published On 2025-05-04 16:16 IST   |   Update On 2025-05-04 16:16:00 IST

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று பலமாக வீசவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இருப்பினும், காலை முதல்  வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென வானம்  மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இது வெயிலை தணித்து இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பொது மக்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும், பலத்த மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மயைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News