தமிழ்நாடு செய்திகள்

9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2025-11-29 11:37 IST   |   Update On 2025-11-29 11:37:00 IST
  • டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
  • கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் காரணமாக துறைமுகத்தில் கப்பல்களுக்கு ஆபத்து, கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News