தமிழ்நாடு செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு - கல்லூரி பேராசிரியர் தற்கொலை

Published On 2025-06-04 11:08 IST   |   Update On 2025-06-04 11:26:00 IST
  • ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
  • சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அருகே கல்லூரி பேராசிரியர் தினகரன் (42) ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News