தமிழ்நாடு செய்திகள்
தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்!
- உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்!
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் வேளாண்துறையின் முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பை போற்றும் விதமாக அவரது பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று கொண்டாடப்படும் தேசிய விவசாயிகள் தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்!
இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்! உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்! என கூறியுள்ளார்.