தமிழ்நாடு செய்திகள்
ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்
- அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று சுவாசத்தை சீராக்க ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த குறைபாடும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று காலை அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு சந்தித்து பேசினார்கள். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.கே.விஜயன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.