தமிழ்நாடு செய்திகள்

முதல்வர் தலையிட வேண்டும்.. நேரு குறித்த இளைஞரின் அவதூறு பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

Published On 2024-12-31 14:08 IST   |   Update On 2024-12-31 14:08:00 IST
  • நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார்.
  • புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புபடுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார். மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியறுத்தி வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News