தமிழ்நாடு செய்திகள்

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவு! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

Published On 2025-08-05 20:51 IST   |   Update On 2025-08-05 20:51:00 IST
  • நாளை முதல் மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.
  • அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை!

50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்களுடன் நாளை (ஆகஸ்ட் 6) முதல், மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.

அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News