தமிழ்நாடு செய்திகள்

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

Published On 2025-07-12 14:02 IST   |   Update On 2025-07-12 14:02:00 IST
  • திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனை தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை.
  • DC பாண்டியராஜன் தவறு செய்ததால் தான் துறைரீதியாக விசாரணை நடத்தி இருக்கிறோம்.

சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மரணம் தற்கொலையாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.

* இதுவரைக்கும் நடந்த விசாரணையில் திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்துகொண்டது உறுதி.

* திருமலா பால் நிறுவனத்தில் என்ன நடந்தது என்ற கோணத்தில் இன்னும் விசாரிக்கவில்லை.

* திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனை தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை.

* சிவில், பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் தன்னுடைய அனுமதி பெற்றுதான் விசாரிக்க வேண்டும்.

* DC பாண்டியராஜனுக்கு விடுப்பு கொடுத்தது நான்தான், அனுமதி பெற்று தான் விடுப்பு எடுத்தார்.

* எனது அறிவுறுத்தலை மீறி ரூ.40 கோடி கையாடல் புகாரை DC பாண்டியராஜன் விசாரித்துள்ளார்.

* DC பாண்டியராஜன் தவறு செய்ததால்தான் துறைரீதியாக விசாரணை நடத்தி இருக்கிறோம்.

* த.வெ.க. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை.

* த.வெ.க.வினர் போராட்டத்திற்கு எப்போதும் காவல்துறை அனுமதி மறுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News