தமிழ்நாடு செய்திகள்

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் - இ.பி.எஸ்.

Published On 2025-07-24 07:46 IST   |   Update On 2025-07-24 07:46:00 IST
  • டெல்டா மாவட்டங்களில் கோவில் நிலம் அதிகமாக உள்ளது.
  • கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர், "டெல்டா மாவட்டங்களில் கோவில் நிலம் அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தால் கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் தந்து, அரசு சார்பில் வீடும் கட்டித்தரப்படும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக கோவில் பணத்தில் இருந்து அரசு கல்லூரிகள் கட்டுவது தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News