திருப்பூர் விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
- திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.
- நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் விசைத்தறிக்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், மாநில, மாவட்ட அரசு நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.