தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியை அழிக்க பா.ஜ.க. திட்டம்- ஜோதிமணி எம்.பி.

Published On 2025-04-11 12:29 IST   |   Update On 2025-04-11 12:29:00 IST

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தர்காவில் நடந்த உரூஸ் விழாவில் ஜோதிமணி எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு குளிர்சாதன பெட்டி, கடிகாரம் வழங்கினார். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி, வேடசந்தூர் வட்டார தலைவர் சதீஸ் தாயார் செல்லம்மாள், காங்கிரஸ் கட்சி நிர்வாகி பழனியப்பன் ஆகியோர் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றியம் வாரியாக நூலகங்களுடன் இணைந்து பொதுத் தேர்வுகளுக்கான அறிவுசார் மையம் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு அடுத்தபடியாக அரசு ஆஸ்பத்திரி தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

தொகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்தம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுனருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும். அரசியல் சாசனத்தை மதிக்கும் ஆளுனராக இருந்தால் இந்நேரம் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை அவ்வாறு செய்யவில்லை. பா.ஜ.க.வுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அதனை திசை திருப்பும் செயலில் சீமான் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியை காலி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News