தமிழ்நாடு செய்திகள்

பொதுத்துறை வங்கிகளில் 10,277 கிளர்க் வேலை- உடனே அப்ளை பண்ணுங்க!

Published On 2025-08-06 12:50 IST   |   Update On 2025-08-06 12:50:00 IST
  • முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை:

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி : Customer Service Associates (Clerk)

பணியிடங்கள்: 10,277. தமிழ்நாட்டில் 894, புதுச்சேரிக்கு 19 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊதியம்: ரூ. 24,050 - 64,480

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: ibps.in

தேர்வு செய்யப்படும் முறை: இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு. இரண்டு தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும், முதன்மை தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

மேலும் தகவலுக்கு IBPS என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News