அமெரிக்க நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ இன்க் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைய தளம் வாயிலாக கையெழுத்தானது.
- ஒப்பந்தத்தின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பன்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுகாதார தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ இன்க் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைய தளம் வாயிலாக கையெழுத்தானது.
இதன் வாயிலாக திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள மருந்தாகவியல் தொழில்நுட்பத் துறையில் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் துல்லியமான மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான ஒரு ஆராய்ச்சி முன்னேற்ற மையம் நிறுவப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பன்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும், இப்பயிற்சியின் வாயிலாக ஆராய்ச்சி மேம்பாட்டை எளிதாக்கும் வகையில் ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் உயர்தொழில்நுட்ப அதிநவீன டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த முடியும்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி இணையதள வாயிலாக தொடக்க விழா மற்றும் பன்முக பயிற்சி நடைபெற உள்ளது.