தமிழ்நாடு செய்திகள்
ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்றுங்கள்- தமிழ்நாடு அரசுக்கு அம்பேத்கர் பேரன் கோரிக்கை
- ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள்.
- தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.
அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், "ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள். தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.
நாடு முழுவதும் சாதி ரீதியாக ஆணவக் கொலை நடக்கிறது; பல உயிர்களை இழந்துள்ளோம்; அனைத்து சமூகமும் ஆணவக் கொலையை தவறாகக் கருதாதது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.