தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முக்கிய சாட்சி டி.ஜி.பி.யிடம் புகார்

Published On 2025-07-03 08:59 IST   |   Update On 2025-07-03 08:59:00 IST
  • அஜித்குமாரை காவலர்கள் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • வீடியோ அஜித்குமார் மரண வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதனை தொடர்ந்து, அஜித்குமாரை காவலர்கள் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ அஜித்குமார் மரண வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன் தனக்கும், தனது குடும்பத்திற்கும அச்சுறுத்தல் இருப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான காவலர் ராஜா சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவடன் தொடர்பில் இருப்பதாக சத்தீஸ்வரன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News