தமிழ்நாடு செய்திகள்

ஏர்போர்ட் மூர்த்திக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Published On 2025-09-08 18:45 IST   |   Update On 2025-09-08 18:45:00 IST
  • டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி.
  • ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.

புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்தனர்.

ஏர்போர்ட் மூர்த்தியை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News