இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 18 மாவட்டங்கள்
- தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, கடலூர், திருமபுரி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசியில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.