தமிழ்நாடு செய்திகள்
வெளியானது 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: முழு விவரங்களை மதியம் 2 மணி முதல் தெரிந்து கொள்ளலாம்
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.