தமிழ்நாடு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 22 வீடுகள் இடிந்து சேதம்

Published On 2025-11-25 10:23 IST   |   Update On 2025-11-25 10:23:00 IST
  • நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
  • வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்:

வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை மறுநாள் காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

தொடர் மழையால் மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு உட்பட்ட இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் சற்று வளர்ந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக அம்மாப்பேட்டை, புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் இருந்த இடமே தெரியவில்லை. இன்று மழை இன்றி வெயில் அடிக்கிறது. இதேப்போல் வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பயிர்கள் பாதிப்பு விவரம் தெரியவரும்.

இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் 13 குடிசை வீடுகள், 9 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 22 வீடுகள் பகுதியளவில் இடிந்து சேதம் அடைந்துள்ளன. 4 கால்நடைகள் இறந்துள்ளது.

Tags:    

Similar News