தமிழ்நாடு செய்திகள்
கைதான மூர்த்தி.
கெலமங்கலம் அருகே கர்நாடக மதுபாட்டில்களை விற்ற வாலிபர் கைது
- மடக்கிபிடித்து அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் மூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெ. காருப்பள்ளி பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் கெலமங்கலம் போலிசார் ஜெ. காருப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை மடக்கிபிடித்து அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், பிடிப்பட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள காமையூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 24) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.