தமிழ்நாடு செய்திகள்

மொடக்குறிச்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் வாலிபர் கைது

Published On 2022-10-28 09:35 IST   |   Update On 2022-10-28 09:35:00 IST
  • இயற்கை உபாதையை கழிக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தனர்.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.

இவர் காலை இயற்கை உபாதையை கழிக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது சிறுமி சத்தம் போட்டு அழுததையடுத்து, ரகுமான் அங்கிருந்து ஓடிவிட்டார்.

அங்கிருந்து தப்பி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரகுமானை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News