தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நீர்-நில பறவைகள் கணக்கெடுப்பு

Published On 2023-01-25 08:36 GMT   |   Update On 2023-01-25 08:36 GMT
  • தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும்.
  • நீர் பறவைகளின் கணக்கெடுப்பு வரும் வருகிற 28, 29 நடைபெற உள்ளது.

சென்னை:

தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது இவ்வரும் வருகிற 28, 29 ஆகிய தேதிகளிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 4 மற்றும் 5-ந்தேதிகளிலும் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பிற்காக மாவட்டந்தோறும் 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பானது தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதால் இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டுமாயின் அந்தந்த மாவட்ட வன அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News