தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: போலீசாரை கண்டதும் பணத்தை தூக்கி எறிந்த ஊழியர்கள்

Published On 2023-03-15 20:50 IST   |   Update On 2023-03-15 20:50:00 IST
  • திருவண்ணாமலையில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது

சென்னை:

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம், ஆவடி பத்திரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்கள், நாகை வட்டாச்சியர் அலுவலகம், கடலூர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரைபட அனுமதி பெற்று தரும் அலுவலகம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம்,

திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், தேனி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

திருவள்ளூர், நசரத்பேட்டை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை தூக்கி எறிந்தனர். கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வெளி ஆட்களை பணியில் அமர்த்தி சோதனைச் சாவடி ஆய்வாளர் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News