தமிழ்நாடு

போரூரில் ரூ.30 ஆயிரம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்- 2 பேர் கைது

Update: 2022-10-05 09:08 GMT
  • சுசிலா தனது மகன் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
  • குன்றத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சபரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.

போரூர்:

போரூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் சபரி (வயது16) பாலிடெக்னிக் கல்லூரிரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சபரி நேற்று நண்பர்களுடன் விளையாடி விட்டு இரவு 9 மணி அளவில் போரூர் ரவுண்டானா வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சபரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர்.

பின்னர் சபரியின் செல்போனை பறித்து அவரது தாய் சுசிலாவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் "உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம் ரூ. 30 ஆயிரம் பணம் கொடுத்தால் விட்டு விடுகிறோம்" என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா தனது மகன் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் விரைந்து வந்து மர்ம நபர்கள் சுசிலாவை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணின் "டவர் சிக்னலை" வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது குன்றத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சபரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சபரியை பத்திரமாக மீட்ட னர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News