தமிழ்நாடு

தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் - தமிழ்நாடு அரசு

Published On 2023-09-01 18:18 GMT   |   Update On 2023-09-01 18:18 GMT
  • தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
  • இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மதுரை:

தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழில் பெயர்ப்பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Tags:    

Similar News