தமிழ்நாடு

திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் செல்ல நேரக்கட்டுப்பாடு- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

Published On 2023-06-13 08:22 GMT   |   Update On 2023-06-13 08:22 GMT
  • அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
  • போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் நகரில் உள்ள சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றிவரும் வாகனங்கள் அதிகளவு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பள்ளி, மருத்துவமனைக்கு மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதில், "திருவள்ளூர் நகர பகுதிக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News