தமிழ்நாடு செய்திகள்

கட்டாய திருமணம் செய்து ஆபாச படம் எடுத்தனர்... தற்கொலை செய்த சிறுமி எழுதிய கடிதத்தில் தகவல்

Published On 2022-11-16 22:59 IST   |   Update On 2022-11-16 22:59:00 IST
  • நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது, நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள்.
  • எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம்.

சேலம்:

சேலம் அருகே பாலியல் தொந்தரவு செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த மாணவி எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 31.08.2022 அன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராணி என்பவர் என்னை அழைத்து பேசி என்னுடைய சான்றிதழை பொய் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார்.

நான் குளியல் அறைக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் உள்ள ராணி, ராமசாமி, மணி ஆகிய 3 பேரும் மயக்க மருந்து அடித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். அப்போது எனது அருகில் 2 பேர் இருந்தனர்.

நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது, நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.

என்னை தவறாக படம் பிடித்து மிரட்டினார்கள். மறு நாள் சமயபுரம் கோவிலுக்கு சென்றதாக சொல் என்று சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இல்லையென்றால் தவறாக படம் எடுத்து வைத்து இருப்பதை உனது அண்ணனுக்கு அனுப்பினால் உனது குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் என்று மிரட்டினர். தொடர்ந்து மணி என்னை மிரட்டினார். இதனால் பயத்தில் மன குழப்பத்துடன் தவித்த நான் போலீஸ் நிலையத்தில் சென்று கோவிலுக்கு சென்றதாக சொன்னேன்.

தினமும் என்னை பக்கத்து வீட்டில் உள்ள அனைவரும் மிரட்டினார்கள். ராமசாமி என்பவர், மேஜர் ஆனதும் என்னை கடத்தி விடுவேன் என மிரட்டினார். எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் காரணம் இல்லை. என் குடும்பத்தார் என்னை துன்புறுத்தவில்லை. என் குடும்பத்தை துன்புறுத்த வேண்டாம். தற்கொலைக்கு காரணமான மாரிமுத்து என்பவர் செல்போனில் உள்ள எனது போட்டோக்களை காண்பித்து மிரட்டுகின்றனர்.

இவ்வாறு அந்த மாணவி கண்ணீர் மல்க எழுதியிருந்தார்.

மேலும் திருமணத்தின்போது சாந்தி, சத்யா, சத்யாவின் கணவர், மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர் எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

Tags:    

Similar News