தமிழ்நாடு செய்திகள்

தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்.

ஒட்டன்சத்திரம் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2023-02-20 15:35 IST   |   Update On 2023-02-20 15:35:00 IST
  • பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து பின்னர் வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது.
  • பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குலவழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையகோட்டை வலையபட்டியில் ராயர்குல வம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகாசிவராத்திரி விழா 4 நாட்கள் கொண்டாடப்படும்.

அதன்படி குலவிளக்கு ஏற்றி விழா தொடங்கியது. 2ம் நாள் அன்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து பின்னர் வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் இதனை செய்தார். 52க்கும் மேற்பட்டோர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

3ம் நாளான இன்று பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குலவழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News