தமிழ்நாடு செய்திகள்

கூடலூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி, குண்டுகள் பதுக்கி வைத்த வாலிபர் கைது

Published On 2022-07-17 11:30 IST   |   Update On 2022-07-17 11:30:00 IST
  • வனவிலங்கு வேட்டைக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.
  • வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கி, 3 குண்டுகள் இருந்தன. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றினர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வனவிலங்கு வேட்டைக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் எல்லமலையில் வசிக்கும் அப்துல் கர்கர் பாவா(33) என்பவர் அடிக்கடி வனவிலங்கு வேட்டைக்கு செல்வதாக நியூ ஹோப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் எல்லமைக்கு சென்று அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, அவரது வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கி, 3 குண்டுகள் இருந்தன. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றினர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அவர் வனவிலங்கு வேட்டைக்கு செல்வதும், அதற்காக நாட்டு துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 3 குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

Similar News