தமிழ்நாடு செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2023-03-13 12:55 IST   |   Update On 2023-03-13 12:55:00 IST
  • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
  • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கதறி அழுது கொண்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அவர் கடலூர் தூக்கணாம்பாக்கம் சேர்ந்த அம்சவல்லி. இவர் கடலூர் அரசு மருத்துவமனைவளாக பகுதியில் வளையல்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று இவரது உறவினர் ஹரி கிருஷ்ணன் அம்சவல்லியை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஹரி கிருஷ்ணன் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வளையல் கடை நடத்துவதற்கு தொந்தரவு அளித்து வருகிறார்.

ஆகையால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலில் பெட்ரோலை ஊற்றியது தெரிய வந்தது. அப்போது அங்கு இருந்த போலீசார் இது சம்பந்தமாக புகார் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கையில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவம் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News