தமிழ்நாடு செய்திகள்

பெயர் சேர்க்க- முகவரி மாற்றம் செய்ய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Published On 2022-10-28 14:22 IST   |   Update On 2022-10-28 14:22:00 IST
  • சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
  • மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இதற்கான சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News