தமிழ்நாடு செய்திகள்
வேதாரண்யம் அருகே வயலின் நடுவே பாரம்பரிய நெல் ரகத்தை காளை வடிவில் நட்டு விவசாயி அசத்தல்
- வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
- விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தில் வசிப்பவர் வேணு காளிதாஸ். விவசாயி.
இவர் தனது ஒரு வயலின் நடுவே வேறொரு விவசாயின் முயற்சியால் கலப்பினமாக இருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒரு அரிய வகையான சின்னார் என்ற சிவப்பு நெல் ரகத்தை வேளாண்மையின் அச்சாணியான காளை வடிவத்தில் நட்டு அதற்கு தீவனமான குதிரைவாலி புல் ரகத்தை சின்னார் நெல்லை சுற்றி நட்டுள்ளார்.
அந்த 2 பயிரும் நன்றாக வளர்ந்த உள்ளது. வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வயலில் காளை மாடு உருவம் போல் நெற்பயிர் சாகுபடி படம் சமூகவளைதலங்களில் வைரலாகி விவசாயிக்கு பாராட்டு குவிகிறது.