தமிழ்நாடு செய்திகள்

5 நகராட்சிகள் தரம் உயர்வு- தமிழக அரசு உத்தரவு

Published On 2023-04-25 12:42 IST   |   Update On 2023-04-25 12:42:00 IST
  • தமிழகத்தில் 5 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தேர்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் 5 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, செங்கல்பட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய 2-ம் நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. மேலும் பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய முதல் நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தேர்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News