தமிழ்நாடு

மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வாகனம் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு

Published On 2023-12-09 09:33 GMT   |   Update On 2023-12-09 09:33 GMT
  • மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
  • மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள் கல்லூரியில் இன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து உரையாடுதல் மற்றும் பத்தாண்டு கால சாதனைகள் , திட்டங்கள் குறித்து எடுத்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வந்தார்.

பின்னர் அவர் கண்காட்சியை பார்வையிட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென விழிப்புணர்வு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் கெமிக்கல் வாயுவை கொண்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.

மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News