தமிழ்நாடு செய்திகள்

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.120 வரை தக்காளி விலை உயர்வு

Published On 2023-07-02 10:51 IST   |   Update On 2023-07-02 10:51:00 IST
  • வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.
  • உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செங்கம்:

வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.

செங்கம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் 100 முதல் 120 ரூபாய் வரையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் தக்காளியின் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்த 20 நாட்களுக்கு விலை ஏற்றமாகதான் இருக்கும் என வியாபாரிகள் கூறினர்.

Tags:    

Similar News