தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்...

Published On 2024-01-29 12:48 IST   |   Update On 2024-01-29 13:28:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.
  • சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.

சென்னை:

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்-உடன் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், வானத்தில் ஆச்சர்யம். ஸ்பெயின் செல்லும் விமானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்சை சந்தித்ததாக பதிவிட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News